நீலகிரி மாவட்டத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிள் கூட்டம் மாவட்ட கழக அலுவலகமான உதகை கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள் தலைமையில், கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பா.மு.முபாரக், கழக தேர்தல் பணி செயலாளர் – அரசு தலைமை கொறடா மாண்புமிகு கா.ராமசந்திரன் மற்றும் காங்கிரஸ் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், சி.பி.ஐ மாவட்ட செயலாளர் போஜராஜ், சி.பி.எம் செயற்குழு உறுப்பினர் சங்கரலிங்கம், முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் அனீபா, திராவிடர் கழகம் மாவட்ட தலைவர் ஜீவா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புவனேஸ்வரன், சுதாகரன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் அபுதாகீர், மதிமுக முன்னாள் நகர செயலாளர் அக்பர் அலி, மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் ஜாகீர் ஹாசன், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஒன்றிய அரசின் கை பாவையாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள SIR தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து

11-11-2025 செவ்வாய்க்கிழமை திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் உதகை ஏடிசி ஜீப் நிறுத்தம் பகுதியில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்புடன் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் திமுக சார்பில் மாவட்ட அவை தலைவர் போஜன், துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் தம்பி இஸ்மாயில், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்குழு உறுப்பினர் ரகு, வட்டார தலைவர் ஆனந்த், சி.பி.எம் சார்பில் தாலுகா செயலாளர் நவீன்.
