உடுமலை
நவம்பர் 05.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருள்மிகு ரத்தினாம்பிகை உடனமர் ரத்தினலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
இத்திருக்கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை,கிருத்திகை, சஷ்டி, தேய்பிறை அஷ்டமி, பிரதோஷம், சனி பிரதோஷம், போன்ற பல்வேறு ஆன்மீக விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
தற்போது ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. வருடந்தோறும் ஐப்பசி மாத அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம் அன்னாபிசேகத்தை ஒட்டி ரத்தின லிங்கேஸ்வரருக்கு (லிங்கத்திற்கு) தயிர்,பால், சந்தனம், விபூதி, போன்ற பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று, அன்னத்தினால அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.
பொதுவாக ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகம் செய்து லிங்கத்தின் மீது சாத்துவதால், பக்தர்களின் பஞ்சம், வறுமை, பட்டினி, போன்ற பசிப் பிணி தீர்ந்து செல்வம் கொழிக்கும் என்பதாகவும், மற்றும் ஒவ்வொரு சோற்றுப் பருக்கையும் ஒரு லிங்கம் ஆக பாவித்து, லிங்கத்தின் மீது அன்னத்தை சாத்துவதால், ஒரே நேரத்தில் கோடி லிங்க தரிசனம் செய்வதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

எனவே, தான் ஐப்பசி மாதத்தில் வருடந்தோறும் உடுமலை தில்லைநகர் ரத்தினலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்து, அதனை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பக்தர்களுக்கு சாமிக்கு சாத்தப்பட்ட அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதேபோல் உடுமலை முத்தையா பிள்ளை லே-அவுட்டில் உள்ள சோழீஸ்ஸ்வரர் கோவில் தில்லை நகர் ஸ்ரீ விசாலாட்சி அம்மன் உடனமர் ஸ்ரீ பஞ்சமுக லிங்கேஸ்வரர் ரேணுகா தேவி அம்மன் திருக்கோவிலில் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
மலையாண்டிபட்டினம் சித்தநாத ஈஸ்வரர் கோவில் போடிபட்டி, சூர்யா கார்டன் காரி சித்தி விநாயகர் கோயில் ஜலகண்டேஸ்வரர், கோவிலிலும் மடத்துக்குளம் பகுதியில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
