திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே உள்ள நி.பஞ்சம்பட்டி கிராமத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இக்கிராமத்தில் ஒரே சமுதாயத்தை சேர்ந்த (வன்னியர்) 2,500க்கு மேற்பட்ட கிறிஸ்தவ குடும்பங்களும், 100க்கும் மேற்பட்ட இந்து குடும்பங்களும் வசித்து வருகின்றனர்.
இங்கு 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கிறிஸ்துவ தேவாலயம் அருகே மற்றும் அரசுக்கு சொந்தமான காலி மைதானம் உள்ளது. அதன் அருகே சீதா லட்சுமண ஹனுமன் சமேத ஸ்ரீ பட்டாபிஷேக ராமர், விநாயகர், காளியம்மன் கோவில்கள் உள்ளது
இந்நிலையில் இன்று (03.11.25) ஸ்ரீ பட்டாபிஷேக ராமர் கோவில், அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கும்பாபிஷேகம் அடுத்த கோவில் நிர்வாகஸ்தர்கள் முடிவு செய்து அதற்கான பணிகளை செய்து வந்தனர் மேலும் அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
இதனையடுத்து, கும்பாபிஷேக விழா முடிந்தவுடன் இந்து கோவில் மற்றும் கிறிஸ்துவ தேவாலயம் அருகே உள்ள பாஸ்கா பொது மைதானத்தில் அன்னதானம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த மைதானத்தில் அன்னதானம் வழங்குவதற்கு அனுமதி கேட்டு காவல் துறையினர் மற்றும் தாசில்தார் ஆகியோரிடம் இந்து மக்கள் மனு அளித்திருந்தனர்.
ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது, இதனை அடுத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பஞ்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இந்து மக்கள் வழக்கு தொடர்ந்தனர்.
இதனையடுத்து அரசுக்கு சொந்தமான மைதானத்தில் அன்னதானம் வழங்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் எவ்வித அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என விரைவில் கூறப்பட்டுள்ளது .
ஆனால் நீதிமன்ற உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சம்பட்டியில் வசிக்கும் கிறிஸ்துவ மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கருப்பு கொடியுடன் மைதானத்தில் கடந்த மூன்று நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
ஆனால், அரசு மைதானத்தை, பாஸ்க மைதானம் என அழைப்பிதழில் அச்சடித்தால் அன்னதானம் வழங்கலாம் எனவும் கோரிக்கை வைத்தனர்.

ஆனால் இதனை இந்து மக்கள் மறுப்பு தெரிவித்தனர். மேலும், இன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. எனவே உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதை அடுத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கிறிஸ்தவர் மக்கள் 500க்கும் மேற்பட்ட மக்கள் இன்று (03.11.25) அதிகாலை தங்களாகவே முன்வந்து சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து காலை 10 மணி அளவில் 4ம் கால யாக கால பூஜை நிறைவடைந்த நிலையில் யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் கலசங்களை சிவாச்சாரியார்கள் மேலதாலங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து விநாயகர், காளியம்மன், மாரியம்மன் மற்றும் ராமர் கோவில் கோபுரத்தில் வைக்கப்பட்டிருந்த கலசங்களில் புனித நீரை ஊற்றிப்பட்டது கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் பஞ்சம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் பிரச்சினைக்குரிய பொது மைதானத்தில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பஞ்சபட்டியில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
