உடுமலை
நவம்பர் 1.
உடுமலை அக்.31-உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், கண்காணிப்பு கேமரா அமைக்க ரயில்வே துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை-திண்டுக்கல் அகல ரயில் பாதையில் உடுமலை ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. இதன் வழியாக கோவை-மதுரை, திருவனந்தபுரம்-ராமேஸ்வரம் பாலக்காடு-திருச்செந்தூர் பாலக்காடு- சென்னை திருநெல்வேலிக்கும் ரயில்கள் செல்கின்றன.
இதனால் ஏராளமான பயணியர் ரயில்களில் செல்ல இங்கு வருகின்றனர் .இங்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே பயணியரின் பாதுகாப்பு கருதியும் சமூக விரோத செயல்களை தடுக்கவும் உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா அமைப்பதற்கு தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
