கன்னியாகுமரி, அக்.30
அணையாடி சான்ஜோ ஆங்கில மீடியம் சி.பி.எஸ்.சி பள்ளிக்கூடத்தில் வைத்து சிறுவர், சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமையைத் தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், அந்த பள்ளியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் கராத்தே பயிற்சி மாணவி எம்.அக்ஷயா, டைவ் அடித்தபடி தன்னுடைய தலையால் 201 ஓடுகளை உடைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
இதன் மூலம் அவர் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சோழன் உலக சாதனை புத்தகத்தின் நிறுவனர் டாக்டர் நீலமேகம் நிமிலன் கலந்து கொண்டு சிறுமி அக்ஷயாவை பாராட்டினார்.
மேலும், பள்ளி தலைமை ஆசிரியர் சகோதரி. பௌலி மற்றும் ரெட் டிராகன் கராத்தே மாஸ்டர் கே.டொமினிக் சாவியர் (பிளாக் பெல்ட் IV டான்) ஆகியோரும் பங்கேற்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு உரையாற்றினர்.
பள்ளி மாணவர்கள் அனைவரும் உற்சாகமாக கலந்து கொண்டு சிறுமி அக்ஷயாவை பாராட்டினர்.
தமிழக விடியல் குமரி மாவட்ட தலைமை நிருபர்: பாவலர் ரியாஸ்.
