விழுப்புரம் மாவட்ட புதிய அலை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம் விழுப்புரத்தில் மாம்பழபட்டு சாலையில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் சி.மாரிமுத்து அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக ஒன் ஸ்டெப் யூனிட்டி காப்பாளர் விவேக் கிராம மேம்பாட்டு பவுண்டேஷன் ஆப் இந்தியா ஆலோசகர் அறவழி மாநில பொதுச்செயலாளர் எஸ் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலவாய்ந்த நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது.
(தாயுமானவர் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளையும் இணைக்க கோரிக்கை.! முதியவர்களுக்கு தாயுமானவர் திட்டத்தின் மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதேபோன்று உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளையும் இந்த திட்டத்தில் இணைத்து அவர்களுக்கும் மாதந்தோறும் ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் தாங்களே வேலை செய்ய முடியாத நிலையிலும், வாழ்வாதார சிக்கல்களை எதிர்கொண்டு வருவதால், அவர்களும் முதியவர்களைப் போல் அரசு உதவித் திட்டங்களின் கீழ் உணவுப் பொருட்கள் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கோரிக்கையை அரசு கவனத்தில் கொண்டு விரைவில் நேர்மறை நடவடிக்கை எடுக்குமாறு மாற்றுத்திறனாளிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சி மே 3 மாநில பொதுச்செயலாளர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது.
