அக் 15 கன்னியாகுமரி :
மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, கழக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மற்றும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் அவர்களின் முயற்சியால், டெல்லி உச்சநீதிமன்றத்தில் தடை ஆணை பெறப்பட்டுள்ளது.
இதன் மூலம், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தேரூர் பேரூராட்சி தலைவராக விரைவில் பொறுப்பு ஏற்க உள்ளார் அமுதா ராணி அவர்கள்.
சென்னையில், கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் அமுதா ராணி.
இந்த சந்திப்பில் கழக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் என். தளவாய்சுந்தரம் மற்றும் தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி. வேலுமணி உடன் இருந்தனர்.
தமிழக விடியல் குமரி மாவட்ட நிருபர் – பாவலர் ரியாஸ்.
