அக் 11; கன்னியாகுமரி –
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் சாஜித் மீது அருணாச்சலா ஹைடெக் பொறியியல் கல்லூரி டிரைவர் சஜின் கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் மாணவர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நாள் திருவிதாங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் “கேம்பஸ் விசிட்” என்ற பெயரில் அருணாச்சலா ஹைடெக் கல்லூரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அப்போது, இரு மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாட்டில் தாமாகவே தலையிட்ட டிரைவர் சஜின், சாஜித் என்ற மாணவனை தகாத வார்த்தைகளால் திட்டி, உடல் ரீதியாக தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு பின், சம்பவம் வெளியில் தெரியாமல் இருக்க மாணவனின் பெற்றோரை மிரட்டி, “எதுவும் நடக்கவில்லை” என கூறுமாறு அழுத்தம் தந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வட்டாரத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. “ஒரு கல்வி நிறுவனத்தின் வாகன டிரைவர் மாணவரை தாக்குவது குற்றச்சாட்டுக்குரிய செயல். இதை மறைத்து நிர்வாகம் அலட்சியம் காட்டுவது சட்டப்படி பொறுப்பில்லா நடவடிக்கை,” என கல்வி நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கல்லூரி நிர்வாகம் “எங்களுக்கு தெரியவில்லை” என்ற பொறுப்பற்ற பதிலை அளித்ததாக கூறப்படுகிறது.

டிரைவர் சஜின் தலைமறைவாக உள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்து உள்ள நிலையில், காவல்துறை அவரை தேடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவன் தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
“மாணவனுக்கு நீதியளிக்க மாநில அரசு மற்றும் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையெனில் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்படும்,” என பொதுமக்கள் வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.
பொதுமக்கள் பார்வையில், மாணவரின் பாதுகாப்பு, கல்வி நிறுவனத்தின் சட்டப் பொறுப்பு. இதில் அரசு தலையீடு அவசியம்!
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் – ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் – பாவலர் ரியாஸ்.
