Headlines

திருநெல்வேலியில், காந்தியடிகளின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, தீபாவளி தள்ளுபடி கதர் விற்பனையை துவக்கி வைத்த, மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார்!

திருநெல்வேலியில், காந்தியடிகளின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, தீபாவளி தள்ளுபடி கதர் விற்பனையை துவக்கி வைத்த, மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார்!

திருநெல்வேலி, அக், 2:-

திருநெல்வேலி பாளையங்கோட்டை, ஆயுதப்படை காவல் பிரிவு எதிரே அமைந்துள்ள கதர் அங்காடியில், “தேசப்பிதா” அண்ணல் மகாத்மா காந்தியடிகளின், 157- வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, இன்று (அக்டோபர். 2) காலையில், அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய பின்னர், “தீபாவளி” கதர் தள்ளுபடி விற்பனையை, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், துவக்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், “இந்த தீபாவளி கதர் சிறப்பு விற்பனைக்காக, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சிகள், பேரூராடசிகள், அரசு மருத்துவமனைகள் ஆகிய இடங்களில், தற்காலிக கதர் விற்பனை நிலையங்கள், இன்று (அக்டோபர். 2) முதல், சிறப்பு விற்பனை முடியும் காலம் வரை, செயல்படும்.கதர் ரகங்களுக்கு 30 சதவிகிதமும், உல்லன் ரகங்களுக்கு 20 சதவிகிதமும், தள்ளுபடி வழங்கப்படும்.

நடப்பு 2025-26 நிதியாண்டிற்கு, திருநெல்வேலி மாவட்டத்துக்கு கதர் விற்பனை குறியீடாக, 82லட்சத்து 55 லட்சம் ரூபாய், நிர்ணயிக்கப்பட்டு உள்ளது!’- எனறு, குறிப்பிட்டார். நிகழ்ச்சியில், தமிழ்நாடு கதர் கிராம தொழில்கள் வாரியம் உதவி இயக்குநர் நல்லதம்பி, மாவட்ட செய்தி- மக்கள் தொடர்பு அலுவலர் இரா. அருள் ஜெயபதி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் எம். எஸ். மகா கிருஷ்ணன், தமிழ்நாடு அரசு கதர் கிராம தொழில்கள் வாரியம் திருநெல்வேலி அலுவலர்கள் தங்கசாமி, ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

*திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *