வணக்கம் !
நான் கா.சசிரேகா. தஞ்சை மாவட்டம் தான் பூர்வீகம், இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று நக்கீரன் பத்திரிக்கையின் தமிழகத்தின் முதல் பெண் நிருபராக பணியை தொடங்கி, அதையடுத்து சென்னையில் தினமலர், தினகரன், தினமணி உள்ளிட்ட நாளிதழ்களில் பணி செய்து தற்போது சிகரம் மீடியா என்கிற நிறுவனத்தில் மங்கையர் சிகரம் மாத இதழின் பொறுப்பாசிரியராக இருந்து வருகிறேன். சுமார் 18 ஆண்டுகளாக ஊடகத்துறையில் பயணிக்கிறேன்.
சென்னை பத்திரிகையாளர் சங்கம், 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடத்தும் தேர்தலில் (மெட்ராஸ் யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட்) செயற்குழு உறுப்பினர் பதவிக்கு உங்கள் ஜனநாயக அணி சார்பில் போட்டியிடுகிறேன்.
ஜனநாயக அணியில் தலைவர் பதவிக்கு வி.செல்வின் வினோத்குமார் (தினகரன்), பொதுசெயலாளர் பதவிக்கு பி.கோபி (சன் நியூஸ்), பொருளாளர் பதவிக்கு எஸ்.ஜோசப்ராஜ் (இ டிவி), துணை தலைவர்கள் பதவிக்கு எம்.முத்தையா (முரசொலி), ஏ.பிரதாப் (டைம்ஸ் ஆப் இந்தியா), இணைச்செயலாளர் பதவிக்கு எம்.வினோத்ராஜா (தினமணி) மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு கோ.வெங்கடேஷ் (சன் நியூஸ்), பிரியா கண்ணன் (குங்குமம்), கா.சசிரேகா (சிகரம் மீடியா) ஆகியோர் போட்டியிடுகிறோம்.
எம்.யு.ஜெ., உங்களுக்கான சங்கம், உங்கள் பிரச்சனைகளை தீர்த்து, தேவைகளை பூர்த்தி செய்து என்றும்
உங்களோடு பயணிக்க நாங்கள் தயாராக உள்ளோம்….
உங்கள் உரிமையை நிலைநாட்ட உங்கள் வாக்குகளை
உங்களின் நம்பிக்கைபெற்ற ஜனநாயக அணிக்கு செலுத்துங்கள்….
வாருங்கள்… நாளை காலை உங்கள் வரவை எதிர்நோக்கி காத்திருப்போம்…!
உங்கள் வாக்கு… உங்கள் உரிமை…. வாக்களிக்க அதுவும், ஜனநாயக அணிக்கு வாக்களிக்க தவறாதீர்கள்!!
நன்றி!
