தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்ற மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.சிவசௌந்தரவள்ளி அவர்கள் தலைமையில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் க.தேவராஜி MLA அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து சிறப்பித்தார்.



இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், ஜோலார்பேட்டை நகர செயலாளர் ம.அன்பழகன், ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளர் கவிதாதண்டபாணி, ஜோலார்பேட்டை நகர மன்ற தலைவர் காவியாவிக்டர், ஜோலார்பேட்டை நகர மன்ற து.தலைவர் இந்திரா பெரியார்தாசன் மற்றும் அரசு துறை அதிகாரிகள், கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டார்கள்.
