ஆக் 22, கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்தின் மயிலாடி பேரூராட்சிக்கு உட்பட்ட விருசடி காலனி பகுதியில் மனதை பதறவைக்கும் அளவுக்கு ஜாதி வெறி கும்பல்கள் நடத்தி வைத்த தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாதி ஆதிக்கத்தின் பெயரில் கூடிய கும்பல்கள், குற்றமற்ற விருசடி ஊர் மக்கள்மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இரத்தம் சொட்டும் அந்த சம்பவத்தில் உயிருக்கு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் அனைவரும் தற்போது நாகர்கோவிலின் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிர் தப்ப போராடி வருகின்றனர்.
இந்த மிருகத்தனமான சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சி அலை ஏற்படுத்தி உள்ளது. அப்பாவி மக்கள் தங்கள் உயிரை காக்க போராடிக்கொண்டிருக்க, அவர்களின் குடும்பங்கள் மருத்துவமனை வாசலில் கண்ணீர் மல்க காத்திருக்கின்றனர்.
சாதி வெறி என்ற விஷம் இன்னும் சமூகத்தில் ஆழமாக வேரூன்றியிருப்பதை வெளிப்படுத்தும் இந்த கொடூர தாக்குதல், கன்னியாகுமரி மாவட்ட மக்களின் மனதை உலுக்கி விட்டுள்ளது.
கேமராமேன் ஜெனீருடன் குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
