வாணியம்பாடி, ஆக.20- திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியம் வளையம்பட்டு ஊராட்சியில் மக்களுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வளையம்பட்டு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

முகாமுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சூரவேல், மகராசி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் வசந்தி அருள், எம்.கங்காதரன், ஊராட்சி மன்ற தலைவர் திருப்தி கவுண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி, ஆலங்காயம் ஒன்றிய குழு தலைவர் சங்கீதாபாரி ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடக்கி வைத்தார்.
முகாமில் கலைஞர் மகளிர் உரிமை தொகை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, மின்சார துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட 14 பல்வேறு துறைகளுக்கான தனித்தனி அரங்குகள் அமைக்கப்பெற்று, அந்தந்த துறைகளுக்கு தொடர்பான மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, மனுக்களை பதிவுசெய்து, அதற்கான விண்ணப்ப ரசீது பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு 2 பேருக்கு இ- பட்டா ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் கா தேவராஜி வழங்கினார்.
முகாமில் வட்டாட்சியர் சுதாகர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.முடிவில் ஊராட்சி செயலாளர் பூபாலன் நன்றி கூறினார்.
