மதுரை JAM மகளிர் அரபிக் கல்லூரி மற்றும் JAM சமூக நல அறக்கட்டளை சார்பாக மதுரை திருமங்கலம் பைபாஸ், வலையபட்டி டோல்கேட் அருகில் சௌதாம்மா நினைவு திடலில் முத்தான முப்பெரும் விழாவான – எட்டாம் ஆண்டு நிறைவு விழா, முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா, பள்ளிவாசல் மற்றும் மதரஸா புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா ஆகிய நிகழ்ச்சிகள் JAM கல்வி குழுமத்தின் நிறுவனர் & தாளாளர் பள்ளப்பட்டி. மௌலானா மௌலவி S.M.முஹம்மது அல்தாப் அலி உலவி அவர்களின் தலைமையில் நடைபெற்றது,

விழாவிற்கு செயலாளர் , தாமரைப்பாடி அந்நூர் இஸ்லாமிய கல்லூரி முஹம்மது யாஸீன் ஜமாலி மற்றும் முஹிப்புல் உலமா கீழக்கரை முஹம்மது மஹ்ரூஃப் துபாய் அவர்கள் அடிக்கல் நாட்டினார்கள்,
வரவேற்புரை வலையபட்டி ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாம் அலாவுதீன் ஹழ்ரத் ஆற்றினார்.
முப்பெரும் விழா சிறப்பான முறையில் நடைப்பெற்றது 700 க்கும் அதிமானோர் கலந்து கொண்டனர் நன்றியுரை கல்லூரி பேராசிரியர் மௌலானா அப்துர் ரஹீம் அவர்கள் நிறைவு செய்ய மதிய உணவுடன் விழா நிறைவுற்றது.
