காவலர்களின் குழந்தைகளுக்கு, வழிகாட்டு புத்தகங்களை வழங்கி வாழ்த்தினார்! திருநெல்வேலி, ஜூன்.24:- திருநெல்வேலி மாநகர காவல் துறையின் சார்பிலான பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில், இன்று [ஜூன்.24] காலையில், காவலர்களுக்கான வாராந்திர கவாத்துப்பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியினை நேரில் பார்வையிட்ட மாநகர காவல் தலைமையிடத்து துணை ஆணையர் எஸ்.விஜயகுமார், அதனைத் தொடர்ந்து, மாநகர காவல்துறைக்கு சொந்தமானதாக உள்ள, மோட்டர் சைக்கிள்கள், ஜீப்கள், சிறிய மற்றும் பெரிய வேன்கள் ஆகியவை, முறையாக பராமரிக்கப் படுகின்றனவா? அந்த வாகனங்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளனவா? போன்றவற்றை நேரில் பார்வையிட்டு, முழுமையாக ஆய்வு செய்தார்.



பின்னர் அவர், மாநகர காவல் துறையில் பணியாற்றி வருவோரின், 1 முதல் 12-வரை பயின்று வரும் குழந்தைகளுக்கு, தமிழ் மற்றும் ஆங்கில மொழியிலான வழிகாட்டு புத்தகங்களை பரிசாக வழங்கி வாழ்த்தினார். இந்த நிகழ்வுகளின் போது, மாநகர காவல் உதவி ஆணையர்கள், போக்குவரத்து பிரிவு காவல் அலுவலர்கள்,மாநகர காவல் ஆய்வாளர்கள், சார் ஆய்வாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
