பெத்தலகம் நகராட்சி நடுநிலைப் பள்ளி, சானாங்குப்பம் நடேசன் நடுநிலைப்பள்ளி, B. கஸ்பா நகராட்சி நடுநிலைப்பள்ளி, புது கோவிந்தாபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் புதியதாக கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறைகளை தமிழக துணை முதல்வர் திரு.உதயநிதி ஸ்டாலின் காணொளி மூலமாக திறந்து வைத்தார்.

அதை அடுத்து ஆம்பூர் நகர மன்ற தலைவர் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். விழாவில், நகராட்சி அலுவலர்களும்,
நகர மன்ற உறுப்பினர்களும், காவல்துறையினர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
