Headlines

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி செண்பகராமநல்லூர் ஆரம்பப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழா!

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி செண்பகராமநல்லூர் ஆரம்பப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழா!

திருநெல்வேலி,நவ.14:- நாட்டின் முதலாவது பிரதம மந்திரி அமரர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினம், “குழந்தைகள் தினம்” என, நாடு முழுவதும், கொண்டாடப்பட்டு வருகிறத. நேருவின் 136-வது பிறந்த தினமான இன்று [நவ.14] காலையில், திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், நாங்குநேரி செண்பகராம நல்லூரில் உள்ள, ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி பள்ளியில், “குழந்தைகள் தின விழா” ஊராட்சி மன்ற தலைவி முருகம்மாள் சிவன் பாண்டியன் தலைமையில், மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளி மேலாண்மைக் குழுத்தலைவி சூர்யா, நாங்குநேரி வட்டார வள மைய மேற்பார்வையாளர் டேனியல் முத்தையா, பள்ளி மேலாண்மை குழுத்துணைத்தலைவி பாப்பா ஆகியோர், முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியரும், தமிழக அரசின் “நல்லாசிரியர்” விருது பெற்றவருமான செல்வராஜ், அனைவரையும் வரவேற்று, அனைவருக்கும் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்களையும், தெரிவித்தார். ஒன்றிய கவுன்சிலர் ஆரோக்கிய எட்வின் சார்பாக, நாங்குநேரி வட்டார அளவிலான, “கலைத் திருவிழா” போட்டிகளில் “வெற்றி” பெற்ற, மாணவ- மாணவிகளுக்கும், குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு நடைபெற்ற, பேச்சு,பாட்டு, திருக்குறள் ஒப்புவிப்பு ஆகிய போட்டிகளில், வெற்றி பெற்ற, மாணவ- மாணவவிளுக்கும், பரிசுகள், பள்ளியின் மேலாண்மக்குழு ஆலோசகரும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமான கோபாலன் சார்பாக, இந்த ஆண்டு புதிதாக, பள்ளியில் சேர்ந்த மாணவ- மாணவிகள், 40 பேருக்கு “ஜெர்சி சீருடைகள்” மற்றும் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும், “லட்டுகள்” ஆகியன, வழங்ப்பட்டன. மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி சின்னத்துரை, வாழ்த்துரை வழங்கினார்.

குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் பாக்கியவதி, எல்.கே.ஜி. யு.கே.ஜி. மாணவ- மாணவிகளுக்கு, “மேஜிக்” சிலேட்களை, “அங்கன்வாடி” மூலமாக வழங்கினார். மாணவச் செல்வங்களின், வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளான, நடனங்கள், உரைகள் மற்றும் பாடல்கள நிகழ்ந்தன. பணியிட மாறுதல் மூலம், சத்துணவு அமைப்பாளராக, புதிதாக பொறுப்பேற்றுள்ள, ரூத் ஜெனிபா, பொன்னாடை அணிவித்து, கவுரவிக்கப்பட்டார். நிகழ்ச்சியில், “டி.வி.எஸ். சமூக சேவை அறக்கட்டளை” கிராம வளர்ச்சி அலுவலர் பவித்ரா, பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், காலைச் சிற்றுண்டி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், அனைத்து பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், இவ்விழாவில் கலந்து சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் விநாயகம், மிகச்சிறப்பாக செய்திருந்தார். பள்ளி இடைநிலை ஆசிரியை சாந்தி, கணினி ஆசிரியை ராஜாத்தி, முன் பருவக்கல்வி ஆசிரியைசகுந்தலா ஆகியோர், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். பள்ளி இடைநிலை ஆசிரியர் ரூபன் இம்மானுவேல் ராஜ் நன்றி கூறினார்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *