தாராபுரம் : திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா நூலகம் “கலைஞர் நூலகம்”என்கிற பெயரில் உருவாக்கப்பட்டு திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. திறப்பு விழாவிற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் நான்காம் மண்டல தலைவர் திரு இல.பத்மநாபன் அவர்கள் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு மு.ஜெயக்குமார் அவர்களும் தாராபுரம் நகர கழக செயலாளர் Er.D.S.முருகானந்தம் B.E.,MC அவர்களும் வரவேற்புரையாற்றினார்கள்.மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள்,மாண்புமிகு தமிழ்நாடு மனித வள மேலாண்மை துறை அமைச்சர் திருமதி.N.கயல்விழி செல்வராஜ் அவர்கள் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.ஈஸ்வரசாமி அவர்கள் முன்னிலை வகித்தனர்,மாநில இளைஞரணி துணை செயலாளர் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.K.E.பிரகாஷ் அவர்கள் நூலகத்தை திறந்து வைத்தார், நிகழ்ச்சியில் மாநில,மாவட்ட ,நகர,ஒன்றிய,பேரூர் கழக இன்னாள்,முன்னாள் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.அனைத்து அணிகளின் இந்நாள் முன்னாள் நிர்வாகிகள்,உள்ளாட்சி அமைப்புகளின் இன்னாள் முன்னால் நிர்வாகிகள்,கிளை கழக நிர்வாகிகள் ,செயல் வீரர்கள் , இளைஞர் அணித் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நிறைவில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்.