திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்லும் நபர்களை நிறுத்தி செல்போன், வழிப்பறி அரங்கேறி வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது.
இந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி அம்பலூர் பெரியாண்டவர் கோவிலில் உண்டியல் மற்றும் குத்து விளக்கு திருடு போனது. மேலும் அம்பலூரிலிரிந்து கொடையாஞ்சி செல்லும் சாலையில் உள்ள மாரியம்மன் கோவில் அம்மன் தாலி திருடு போனது.
இது குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை பெற்று போலீஸார் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்திரவின் பேரில் வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் அம்பலூர் போலிசார் குழு, மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் போலிசார் அம்பலூர், புத்துக்கோவில் ஆகிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேரை நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் போலீசார் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.
விசாரணையில் அந்த நபர்கள் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்த சந்திப்(19), அம்பூர்பேட்டை யை சேர்ந்த லோகேஷ்(20) என்பதும் இவர்கள் 2 பேரும் தேசிய நெடுஞ்சாலையில் செல் போன் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும், மேலும் கடந்த 2 ஆம் தேதி 2 கோவில்களில் பூட்டை உடைத்து திருடி சென்றது தெரியவந்தது.அதன் பின்னர் அவர்களிடமிருந்து விலையுயர்ந்த 24 செல் போன்கள்,இரு சக்கர வாகனம் சைக்கிள்,அம்மன் தாலி, 2குத்து விளக்குகள்,2 பித்தளை விளக்குகள்,2 பித்தளை சொம்புகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதி மன்றந்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர்
அஷ்ரஃப் மர்வான்