6 பேர் சம்பவ இடத்தில் பலி.!
கள்ளக்குறிச்சி மாவட்டம், சென்னை – திருச்சி நெடுஞ்சாலை சித்தனுர் கிராமத்தில் வந்து கொண்டிருந்த போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியதில் வேனில் சென்ற 13 பேரில் சம்பவ இடத்திலேயே டிரைவர் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த திருநாவலூர் காவல்துறையினர் விபத்து நடந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.