தென்காசி, ஜனவரி : 1
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள வல்லம் கிராமம் இயற்கை சூழ்ந்த பொதிகை மலை அடிவாரத்தில் அமைந்த சிறிய கிராமம் ஆகும் இங்கு பிரதான தொழிலாக அரிய வகை பழங்கள் மொத்த விற்பனை செய்யும் தொழிற்கூடமாக செயல்பட்டு வருகிறது.
இங்கு வாழும் இஸ்லாமியர்கள் கடந்த 200 வருடங்களுக்கு முன்பாக தொழுகை பள்ளியை அமைத்து இறை வழிபாடு செய்து வந்தனர் பழமையான பள்ளி என்பதாலும் தற்போதைய மக்கள் தொகை வளர்ச்சியின் அடிப்படையில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்கு போதிய இட வசதி இல்லாத சூழ்நிலையில் விஸ்திகரிக்கும் பணியானது கடந்த ஆறு மாத காலமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நிலையில் புதிய கட்டிடம் புதிய வருடம் துவங்கிய நிலையில் கட்டுமானம் முடிந்த சாகுல் ஹமீது ஆண்டவர் ஜூம்மா பள்ளிவாசல் தொழுகைக்காக திறந்து வைக்கப்பட்டது மிகவும் பழமை வாய்ந்த பள்ளிவாசல் என்பதாலும் ஏராளமான பொதுமக்கள் ஒன்று கூடி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு ஹாஜி எம் கே அகமது மீரான் தலைமை தாங்கினார் நாகூர் மைதீன் என்ற ராஜ் ஜாபர் அலி முகைதீன் அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லம் திவான் ஒலி சிறப்புரையாற்றினார் நிகழ்ச்சியினை ஜமாத்துல் உலாமா பொறுப்பாளர் கமருதீன் ஆலிம் பாகவி தொகுத்து வழங்கினார் பள்ளிவாசலின் முதல் கட்டிடத்தை எம்கே கே அகமது மீரான் மற்றும் இரண்டாவது கட்டிடத்தை தென்காசி யூனியன் சேர்மன் ஷேக் அப்துல்லா ஆகியோர் திறந்து வைத்தனர்.
பள்ளியின் இமாம் சையத் அலி சிறப்பு துவா ஓதி இனிப்புகள் வழங்கப்பட்டது நாகூர் மைதீன் என்ற ராஜ் நன்றியுரை கூற விழா சிறப்பாக முடிவற்றது இந்நிகழ்ச்சியில் காதர் அண்ணாவி ena செய்யது ஆசிரியர் முகமது இஸ்மாயில் ரஹ்மத் புரோட்டோ ஸ்டால் உரிமையாளர் ஆஷிக் சாகுல் ஹமீது திவான் ஒலி செய்யது சுலைமான் என்ற சீமான் கனி பீர்முகமது ஊராட்சி மன்ற உறுப்பினர் திவான் ஒலி நசீர் அகமது ஜாஹிர் ஹக்கீம் ஷேக் மைதீன் எஸ் எஸ் ஃப்ரூட் பீர்முகமது ஹலிபா ஹபிபுல்லா உட்பட ஏராளமான பொதுமக்களும் பள்ளிவாசல் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
