1920ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவுப்படி மலைமேல் உள்ள பகுதி தர்காவுக்கு சொந்தமானது. நெல்லித்தோப்பு முதல் மலை உச்சிவரை படிக்கட்டு உள்ள பகுதிகளும் தர்காவுக்கு சொந்தம் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தீபத்தூண் என கூறப்படும் தூண், தர்கா இடத்தில்தான் உள்ளது.

மலை உச்சியில் தீபம் ஏற்றுவது கோவில் மரபு அல்ல என்பது 1862லேயே உறுதி செய்யப்பட்டுள்ளது. தனி நீதிபதி பழைய தீர்ப்புகளில் உறுதிசெய்யப்பட்ட தரவுகளை எல்லாம் கருத்தில் கொள்ளவே இல்லை. மலை உச்சியில் தர்கா இருப்பதால்தான் அது சிக்கந்தர் மலை என அழைக்கப்படுகிறது. தர்கா அருகே தொழுகை நடந்து வருகிறது; அதுவும் ஒரு வழக்கமாகவே பின்பற்றப்படுகிறது.
தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவில், தர்கா நிர்வாகத்திற்கு உடன்பாடு இல்லை. தர்கா முழுவதும் சர்வே செய்ததற்கான ஆவணங்களை நாளை தாக்கல் செய்கிறோம். உரிமையியல் நீதிமன்றம் வழங்கிய உரிமையை தர்காவுக்கு அளித்து உறுதி செய்ய வேண்டும்.”இவ்வாறு கூறப்பட்டுள்ளது
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
