கோவை மாவட்டம் (04.12.25)
கணுவாய் அருகில் உள்ள பிரபலமான பள்ளியில் நேற்று(03.12.25) பள்ளி நேரத்தில் பள்ளிக்குள், இரண்டு மாணவர்கள் காதலுக்காக சண்டையிட்டுக் கொண்டதாக தகவல்.

இதில ஒரு மாணவனின் மூக்குடைப்பு. மற்றொரு மாணவனை பள்ளி நிர்வாகம் இடைநீக்கம் செய்தது, இதுபோன்று கைகலப்பு ஏற்பட்ட பின், சம்பவத்தை கவனிக்காமல், தூங்கிக் கொண்டிருக்கும் பள்ளி நிர்வாகம், மற்றும், பெற்றோர் ஆசிரியர் சங்கம் இணைந்து மாணவர்களுக்கு முறையான கவுன்சிலிங் கொடுத்து மேற்கொண்டு இது போல் எந்த ஒரு கைகலப்பும்,ஏற்படாமல் பள்ளி மாணவர்களின் படிப்புக்கு எந்த ஒரு தடையும் வராமல் காக்க வேண்டும்.
என்றும், மேலும் விசாரிக்கையில் பள்ளி மாணவர்களுக்கான விடுதியில் உணவு மிக மிக தரக்குறைவாக உள்ளது என்றும், விடுதி மாணவர்கள் மற்றும்,சக மாணவர்களின் பெற்றோர்கள் மிக வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டனர்.
கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்
