உடுமலை : நவம்பர் 05.
திமுக தலைமைகழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளராக பணியாற்றும் இல.பத்மநாபன், திருப்பூர் கிழக்கு மாவட்ட பெறுப்பாளராகநியமிக்கப்படுகிறார்.
அவருக்கு பதிலாக திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக பொள்ளாச்சி எம்பி ஈஸ்வர சாமி நியமிக்கப் படுகிறார்.
திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளராகபணியாற்றி வந்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திமுக துணைப் பொதுசெயலாளராகநியமிக்கப்படுகிறார்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
