அக்டோபர் 11.உடுமலை-
உடுமலையில் திருப்பூர் மாவட்ட அளவிலான சைலாத் சிலம்ப சங்கம் நடத்தும் 5வது மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள் நடந்தது.
பகத்சிங் சிலம்பம் களரி மார்ஷியல் ஆர்ட்ஸ் & கல்ச்சுரல் சேரிட்டபிள் டிரஸ்ட் திருப்பூர் மாவட்ட சைலாத் சிலம்பச்சங்கம் மற்றும் லெட்டினட்சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்திய 5வது மாவட்ட அளவிலான சைலாத் சிலம்ப போட்டிகள் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை வளாகத்தில் நடந்தது.
பகத்சிங் சிலம்பம் களரி மார்ஷியல் அறக்கட்டளை நிறுவனரும், செயலாளர் களரி பயட்டு அசோசியேசன் ஆப் தமிழ்நாடு ஆசான் வீரமணி வரவேற்று பேசினார்.
சோழமாதேவி அக்ஷரா வித்யா மந்திர் தொடக்கப்பள்ளி துணை சேர்மன் முருகேசன் முன்னிலை வகித்தார்.லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை நிறுவனர் கே.ஆர்.எஸ்.செல்வராஜ் தலைமை வகித்தார்.
போட்டிகளை விவேகானந்தா வித்யாலயா பள்ளி தாளாளர் எஸ். மூர்த்தி துவக்கி வைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சாஸ்தா,கம்ப்யூட்டர் ரமேஷ். டிஆர்பி மாவட்ட தொழில் மையம் மணிவாசகம் . உடுமலை நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வகுமார் ,பல் மருத்துவர் ஸ்ரீ பிரியா, நூலகர் கணேசன் (ப.நி.) ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிற்பகல் நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட சைலாத் சிலம்ப சங்கத் தலைவர் சீத்தாபதி வரவேற்று பேசினார்.
சிவில் இன்ஜினியர் ஹரி பிரசாத், லெப்ட்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை டிரஸ்டியும் உடுமலை இந்திய கட்டுமானங்கள் சங்க தலைவருமான இன்ஜினியர் பாலமுருகன். கிராம நிர்வாக அலுவலர்கள் தாந்தோணி,வினோத்குமார், துங்காவி,மணிரத்தினம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக பொன்முத்து பர்னிச்சர் விஜய மோகன், முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க தலைவர் ராமலிங்கம் , கேரளாவல்லப்பட்டா களரி சங்கம் ஆசான் சரவணன், உடுமலை ஆறுமுகம் கிருஷ்ணசாமி ஆசான் மடத்துக்குளம் சூர்ய ராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு சைலாத் சிலம்பச் சங்கம் நிறுவனர் மற்றும் செயலாளரும் சங்க நிறுவனர், மற்றும் பொதுச் செயலாளர் பேராசன் குமரி எஸ். கணேசன். தமிழ்நாடு களரி பயட்டு அசோசியேசன் தலைவர் தேவராஜன் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
இதில் திருப்பூர் மாவட்டசைலாத் சங்க சிலம்ப விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை சைலாத் சிலம்ப சங்கம், பகத்சிங் களரி மார்ஷியல் ஆர்ட்ஸ் அறக்கட்டளை பயிற்சியாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.
நிறைவாக பகத்சிங் சிலம்பம் களரி மார்ஷியல் ஆர்ட்ஸ் கல்சுரல் அண்ட் சேரி டபிள் மேனேஜிங் டிரஸ்ட்டி ராதா வீரமணி நன்றி கூறினார்.
