செப் 07, உடுமலை –
உடுமலை அக்.6-உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் தேவையான அளவு நிழல் கூரை அமைத்தல், இருக்கை வசதி ,காத்திருப்பு அறை,பராமரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பயணியர் அதிருப்தியில் உள்ளனர்.
திண்டுக்கல்-பாலக்காடு அகல ரயில் பாதையில் அமைந்துள்ள உடுமலை ரயில்வே ஸ்டேஷன் மதுரை ரயில்வே கோட்டத்தால் பராமரிக்கப்படுகிறது. பயன்பாட்டுக்கு வந்து பல ஆண்டுகளாகியும் பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளன.
ரயில்வே ஸ்டேஷனில் மூன்று பெட்டிகளுக்கான பயணியர் ஏறும் பகுதியில் மட்டுமே நிழல் கூரை உள்ளது. 20க்கும் அதிகமான பெட்டிகளில் ஏற பயணியர் நிழல் கூறை இல்லாமல் வெய்யிலும் மழையிலும் திறந்தவெளியில் காத்திருக்க வேண்டி உள்ளது.
அனைத்து பிளாட்பார்ம் களிலும் நிழற்கூரை அமைக்க வேண்டும், என்ற கோரிக்கை கண்டு கொள்ளப்படவில்லை முதியவர்கள் நிழல் கூரையிலிருந்து தங்களுக்கான பெட்டி வரை நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.
காத்திருப்பு அறையும் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. போதிய பராமரிப்பு இல்லாததால் கட்டிடங்களையும் பயன்படுத்த முடிவதில்லை.
நிழற்கூரை இல்லாத இடங்களில் உள்ள இருக்கைகள் சேதம் அடைந்துள்ளதால் நின்று கொண்டே பயணியர் காத்திருக்கின்றனர்.
ரயில்வே ஸ்டேஷனின் எதிர்புறத்தில் ரயில்வேக்கு சொந்தமான இடம் புதூர் மண்டி காணப்படுகிறது. அப்பகுதியை தூய்மைப்படுத்தி கம்பி வேலி அமைக்க வேண்டும் இத்தகைய கோரிக்கைகள் மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகத்திற்கு ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர்கள் மற்றும் உடுமலை பகுதி பயணியர் சங்கம் சார்பில் பலமுறை மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.
இதனால் உடுமலை பகுதி பயணியர் அதிருப்தியில் உள்ளனர்.
