செப் 24 கன்னியாகுமரி :
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஆர். அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் சாலைப் பாதுகாப்பு குறித்த கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. ஸ்டாலின், இ.கா.ப., நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, பத்மநாபபுரம் சார்ஆட்சியர் திரு. வினய்குமார் மீனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி. சுகிதா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி. எஸ். காளீஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்கும் நடவடிக்கைகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், போக்குவரத்து ஒழுங்கு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல், ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் பயன்படுத்துதல் குறித்து பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கும் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.
மேலும், முக்கிய சாலைகளில் சிசிடிவி கேமரா கண்காணிப்பு அதிகரித்தல், ஆபத்தான இடங்களில் எச்சரிக்கை பலகைகள் அமைத்தல், வேகக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடுமையாக அமல்படுத்துதல் போன்ற தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.
இந்த கூட்டத்தில் அரசு துறை அதிகாரிகள், போக்குவரத்து போலீஸ், சாலைப் பணிகள் துறை பொறியாளர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டு தங்களது பரிந்துரைகளை வழங்கினர்.
குமரி மாவட்ட நிருபர் : பாவலர் ரியாஸ்.
