நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பெரிய கரும்பாலம் டபுள் போஸ்ட் பகுதியை சேர்ந்த டோமினிக் (54) மாற்றுத்திறனாளி என்று கூறப்படுகிறது.
இவர் குன்னூர் அருகே தேயிலை தூள் வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.. இவருடைய மனைவி லிட்வின் இவர் ட்ருக் பக்காசூரன் மலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்..இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் லிட்வின் மற்றும் அவரது மகள் ஆகியோர் சேலாஸ் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்ற நிலையில் அவர்களது வீட்டில் இருந்து கரும்பு புகை வருவதாக அக்கம் பக்கத்தினர் தகவல் அளித்ததன் பெயரில் குன்னூர் தீயணைப்பு துறையினர் மற்றும் கேத்தி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து ஜன்னல் கதவை உடைத்து பார்த்தபோது டோமினிக் உடல் தீயில் கருகி நிலையில் சடலமாக மீட்கப்பட்டது… பின்பு பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு லாலி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் டோமினிக்கின் மரணம் கொலையா ?தற்கொலையா? அல்லது மின் கசிவால் உயிரிழந்தாரா? என்ற பல கோணத்தில் கேத்தி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….
