ஆனால் முறையான அறிவிப்பு இல்லாததால் மாற்றுத் திறனாளிகள் முகாமை பயன்படுத்தி அரசு வழங்கும் உதவிகளை பெற இயலாத நிலை ஏற்பட்டது.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,
உடல் மற்றும் மனரீதியாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 21 வகையாக பிரிக்கப்பட்டு தேசிய அடையாள அட்டையுடன் கூடிய 20 வகையான உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதை பெறுவதற்காக மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த மாதத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்டம் முழுவதும் முகாம்கள் நடத்தப்படுகிறது.அந்த வகையில் உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் முகாம் நடைபெற்றது.
இதற்கான அறிவிப்பு முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை.இதன் காரணமாக ஒரு சிலரே வருகை தந்திருந்தனர்.அப்போது அவர்களுக்கு தேவையான வழிகாட்டு உதவிகளை செய்து கொடுப்பதற்கு நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் மாற்றுத்திறனாளிகள் அரசு உதவிகள் மற்றும் சிகிச்சை பெற முடியாமல் அவதிக்கு உள்ளானார்கள்.
அத்துடன் குடிநீர் உணவு உள்ளிட்ட அடிப்படை அத்தியாவசிய தேவைகளையும் செய்து கொடுக்கவில்லை.எனவே இனிவரும் காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு முறையான அறிவிப்பு கொடுத்து முகாம்களை நடத்துவதற்கு முன் வர வேண்டும்.
அத்துடன் முகாமில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். மடத்துக்குளம் அரசு ஆஸ்பத்திரியில் வருகின்ற 23-ம் தேதி முகாம் நடைபெற உள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
உடுமலை : நிருபர்: மணி