வாணியம்பாடி, அக்.20- திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சின்ன கடை தெருவில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (28)
என்பவர் சொந்தமாக நீல்கிரீஸ் பேக்கரி கடையை நடத்தி வருகிறார்.
இந்த பேக்கரி கடையில் திருப்பத்தூர் அடுத்த புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சேகர் வயது (32) என்பவர் கடந்த ஆறு மாதமாக வேலை செய்து வருகிறார்
இந்த நிலையில் இன்று மைக்ரோவேவ் ஓவனிலிருந்து பப்ஸ் எடுக்கும்போது திடீரென மின்சாரம் தாக்கி கீழே விழுந்துள்ளார்.
பின்னர் அங்கிருந்தவர்கள் இவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.