திருமூர்த்திமலையில் அனுமதியின்றி செயல்படும் தனியார் ரிசார்ட்களை இழுத்து மூட வேண்டும். இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை.!
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ளது திருமூர்த்தி மலை. சிவா, விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் குடிகொண்டு அருள்பாலிக்கும் ஒப்பற்ற திருத்தலம் இதுவாகும். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்தத் தலத்தை ‘தென் கயிலாயம்’ என்று போற்றுகின்றனர், பக்தர்கள். மும்மூர்த்தி ஆண்டவர், திருமூர்த்தி ஆண்டவர், தெற்குச் சாமி, கஞ்சிமலையான், தென்கயிலாய மூர்த்தி என்றெல்லாம் இறைவனை அழைக்கும் உன்னதமான திருத்தலம் இது. நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று…