அரசியல்
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மற்றும் வடக்கு பச்சையாறு அணைகளில் இருந்து, நடப்பு பிசானப்பருவ சாகுபடிக்காக, தண்ணீரை திறந்து வைத்த, சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் நேரு!
திருநெல்வேலி,டிச.23:- திருநெல்வேலி புறநகர் மாவட்டம் மணிமுத்தாறு மற்றும் வடக்கு பச்சையாறு ஆகிய 2 அணைகளில் இருந்து, நடப்பு பிசானப்பருவ சாகுபடிக்காக, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் [சபாநாயகர்] மு.அப்பாவு மற்றும் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு ஆகியோர், சிறப்பு பூஜைகளுக்கு பின்னர், தண்ணீரை திறந்து வைத்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப. கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் சி.ராபர்ட் புரூஸ், சட்டமன்ற…
சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் விவசாயிகள் விடுதலை முன்னணி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் விவசாயிகள் விடுதலை முன்னணி கட்சி சார்பாக தோழர் ராமசாமி தலைமையில் இதில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த இணையத்துல்லா, கோவிந்தராஜ், நாராயணன், தவ்லத் கான், மக்கள் அதிகாரம் தோழர் ராமலிங்கம், பழனி, கண்ணுசாமி, விவசாயிகள் விடுதலை முன்னணி கட்சி சார்ந்த பாண்டியன், ராமு, வெங்கடேசன், விடுதலை சிறுத்தை கட்சியை சார்ந்த ஒன்றிய செயலாளர் சிந்தனை வளவன், CPM கட்சியைச் சார்ந்த நாகராஜ், மணிமாறன், CPI கட்சியைச் சார்ந்த முருகேசன் மற்றும் திராவிட…
தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டத்தின்கீழ் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.
தென்காசி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டத்தின்கீழ் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தென்காசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆயிரப்பேரி கிராமத்தில் தொடங்கி வைத்து கோமாரி நோய் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரதிகளை வெளியிட்டு கால்நடை வளர்ப்போருக்கு கால்நடை நல அட்டைகளை வழங்கினார். முகாமில் 450 கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, தென்காசி மாவட்டம் முழுவதும் சுமார் 1.33 இலட்சம் கால்நடைகளுக்கு கோமாரி…
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் தெற்கு மாவட்டம் மடத்துக்குளம் கிழக்கு ஒன்றியம் கார்தொழுவு திமுக சார்பில் இனிப்பு வழங்கும் விழா.
திருப்பூர் தெற்கு மாவட்டம் மடத்துக்குளம் கிழக்கு ஒன்றியம் காரத்தொழுவு திமுக சார்பில் இன்று கழக இளைஞர் அணி செயலாளர். தமிழ்நாடு துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் 47ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கழக கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. பின்னர் கார்த்தொழுவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி .ஊ ஒ து பள்ளிகளில் பயிலும் 1000.மாணவ மாணவியர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மாவட்ட கழக பொருளாளர் கே.எம்.முபாரக்அலி. ஒன்றிய செயலாளர் எம்.ஏ.ஷாகுல் ஹமீது.ஒன்றிய…
பழனியில் திமுக சார்பில் துணை முதல்வர் பிறந்த நாள் விழா…
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் வீடற்றோர் தங்கும் விடுதியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு சார்பாக உணவு வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றன. இந்நிகழ்வின் தலைமையாக மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்அஸ்வின் பிரபாகர் மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு அமைப்பாளர் ரபீக் மைதீன்துணை அமைப்பாளர் சேக் அலாவுதீன் ஆகியோர் தலைமையில் வீடற்றோர் தங்கும் விடுதியில் உள்ள அனைவருக்கும் இலவச உணவு வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றன. மேலும் இந்நிகழ்வில்…
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், கண்காணிப்பு குழுத் தலைவர் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் தலைமையில் இன்று (21.11.2024) நடைபெற்றது. அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் ச.காந்திராஜன், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் ஜோ.இளமதி ஜோதிபிரகாஷ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் சே.ஹா.சேக் முகையதீன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.திலகவதி, தமிழ்நாடு மாநில…
அங்கன்வாடி புதிய கட்டணங்களை திறந்து வைத்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி.
திண்டுக்கல் மாவட்டம், பொன்னிமாந்துரை ஊராட்சி, குட்டியபட்டியில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி அருகில் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ப.க.சிவகுருசாமி, துணைத்தலைவர் ராஜேஸ்வரி தமிழ்செல்வன், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர்சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்ட நிருபர் : பாலசிந்தன்
திருநெல்வேலி வள்ளியூரில், நாட்டின் முதலாவது பெண் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாளில், தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்ட காங்கிரஸ் கட்சியினர்!
திருநெல்வேலி,நவ.19:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் வள்ளியூரில், முன்னாள் பாரதப்பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாள், சிறப்பாக கொண்டாடப்பட்டது. இங்குள்ள புதிய பேருந்து நிலையத்தில் வைத்து இந்த விழா நடைபெற்றது. வள்ளியூர் நகர காங்கிரஸ் தலைவர் எஸ். பொன் பாண்டியன் தலைமையில், வள்ளியூர் வட்டார காங்கிரஸ் தலைவர் “லயன்” அருள்தாஸ் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், “சிறப்பு அழைப்பாளர்களாக” “திசையன்விளை” விவேக் முருகன், “தணக்கர்குளம்” பஞ்சாயத்து தலைவர் சுயம்புலிங்க துரை ஆகியோர், கலந்து கொண்டனர். இவர்களுடன், வள்ளியூர் நகர…
திருநெல்வேலியில் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய மருத்துவ கட்டிடங்கள் மற்றும் மருத்துவ பிரிவுகளை துவக்கி வைத்த, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்!…
திருநெல்வேலி,நவ.17:- தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியிலுள்ள, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 1 கோடியே 10 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள, 23 படுக்கைகள் கொண்ட கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் பிரிவு [PAY WARDS] கட்டிடத்தையும், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள, அரசு மருத்துவ மனையில் பணிபுரியும் பெண்களுக்கான, அனைத்து வசதிகளும் கொண்ட, சிறப்பு அறைகள் கொண்ட கட்டிடத்தையும், பாளையங்கோட்டையை அடுத்துள்ள ரெட்டியார் பட்டியில், 50 லட்சம்…
உளுந்தூர்பேட்டையில் மத்திய அரசு கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அகில இந்திய அளவில் பிரச்சார இயக்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பூவராகவன், ஆனந்தன் தலைமையேற்று கண்டன உரையாற்றினார்கள். இதில் ஒரே தேசம் ஒரே தேர்தல் வாபஸ் பெற வலியுறுத்தியும், விலைவாசி உயர்வை கண்டித்தும்,ரயில்வே உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உள்ள காலிப் பணிகளை நிரப்ப கோரியும்,அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம்…
- 1
- 2