மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன் IPS., அவர்களின் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் திரு.பிரேம்ஆனந்த் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.சண்முகம் மற்றும் காவலர்கள் தலைமையில் மணம்பூண்டி கூட்ரோடு அருகே வாகனத் தணிக்கையில் இருந்தபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அதில் குட்கா பொருட்கள் இருந்ததை கண்டறிந்து எதிரியை நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் திருக்கோவிலூர் தேவியகரம் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகன் திருமால் (27) என தெரியவந்தது மேலும் எங்கிருந்து வாங்கி வரப்பட்டது போன்ற விசாரணையில் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த கட்சிகுட்சான் கிராமம் வேலு என்பவரின் மகன் ஶ்ரீபன் (27) மற்றும் கண்டாச்சிபுரம் தாலுகா அரகண்டநல்லூர் கிராமம் காமராஜர் தெருவை சேர்ந்த பஞ்சமூர்த்தி ராமச்சந்திரன் (41) ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து மொத்தம் 220 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள், ரூபாய் 40 ஆயிரம் பணம் மற்றும் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்ட எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்:
1.Hans- 8,775 piece
2.Cool lip- 1184 piece
3.vimal-15,000 piece
4.V-I – 15,000 piece
Total 220 kg
4.TN 32 AH 3360 (two wheeler)
