மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட GRP தெருவில் புதுச்சேரி மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உதவி ஆய்வாளர் திரு.நவநீதகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் தலைமையில் அப்பகுதிகளில் சென்று சோதனை மேற்கொண்டதில் அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை விசாரணை செய்ததில் புதுச்சேரியில் இருந்து மதுபானம் எடுத்துவந்து விற்பனை செய்வதாக கூறியதை அடுத்து எதிரியிடம் இருந்து 90 ml அளவு கொண்ட 100 பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு, விசாரணையில் எதிரி விழுப்புரம் நந்தனார் தெருவில் வசிக்கும் கதிர்வேல் என்பவரின் மகன் ஆனந்தன் (40) என தெரியவந்தது. புதுச்சேரி மது பானம் கடத்தி வந்து விற்பனை செய்த எதிரி மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட காவல்துறை மேற்கு காவல் நிலையம் புதுச்சேரி மது பானம் விற்றவர் கைது.
