உடுமலை
நவம்பர் 22.
உடுமலை அருகே உள்ள குறுஞ்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி உடுமலை பாரத் கேஸ் ஏஜென்சீஸ் விநியோகஸ்தரான செல்வி கேஸ் சார்பில் குறுஞ்சேரி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பணியாற்றும் (100 நாள் வேலை) பயனாளர்களுக்கு கிராம விழிப்புணர்வு திட்டத்தின் கீழ் எரிவாயு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

முகாமிற்கு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பரமேஸ்வரி தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார்.
செல்வி கேஸ் உரிமையாளர் எம்பி அய்யப்பன் எரிவாயு பயன்படுத்தும் முறைகள் எரிவாயு சிக்கனமாக பயன்படுத்துவது குறித்தும் எளிதாக பயன்படுத்தும் 5 கிலோ சிலிண்டர் பயன்படுத்துவது அதனால் ஏற்படும் சிக்கனம் குறித்தும் விளக்கினார்.
சுரக்ஷா ட்யூபுகளை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் என்றும். எரிவாயு பயன்படுத்தும் போது கசிவு ஏற்பட்டால் உடனடியாக அலுவலகத்தை தொடர்பு கொள்வதற்கு உண்டான எமர்ஜென்சி எண் வழங்கப்பட்டது.
முகாமில் எரிவாயு இணைப்பு புதிதாக பெற விரும்புபவர்களுக்கு கட்டணச் சலுகை அளித்து இணைப்புகள் வழங்கப்பட்டது.
எரிவாயுவைஎவ்வாறு சிக்கனமாக பயன்படுத்துவது என்று பணியாளர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
இதில் வானொலி தங்கவேல் கலந்து கொண்டு பெண்கள் எளிதாக எரிவாயு எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்துவது அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கி பேசினார்.
செல்வி கேஸ் நிறுவனத்தின் சார்பில் மாதம் ஒருமுறை கிராம பகுதிகளில் ஸ்டவ் இலவச சர்வீஸ் செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதைக் கிராம பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது.
