திருநெல்வேலி,நவ.19:-
நெல்லையை அடுத்துள்ள, பேட்டை நடுக்கல்லூர் “அரசு” மேல்நிலை ப்பள்ளியில், 9-ஆம் வகுப்பு பயின்று வரும் மணவர் R.கவுதம், மாநில அளவிலான சதுரங்கம் (செஸ்) போட்டியில் பஙகேற்பதற்கான, தகுதியைப் பெற்றுள்ளார்.
மாவட்ட அளவிலான சதுரங்கம் {செஸ்} போட்டியில் திறமையாக விளையாடி, மாவட்டத்தின் முதன்மை வீரராக தேர்வு செய்யப்பட்டுளளதை தொடர்ந்து, இவர் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பதற்கு, தகுதி பெற்றுள்ளார்! என்பது, குறிப்பிடத்தக்கதாகும்.
மாநில போட்டிக்கு தகுதி பெற்று, பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ள மாணவர் கவுதமை, “பள்ளித் தலைமையாசிரியை” J.ரோகிணி பாராட்டி, வாழ்த்தினார்.
இந்த நிகழ்வில், பள்ளி உடற்கல்வி ஆசிரியர் முனைவர்.வெ.பெரிய துரை மற்றும் ஆசரியப் பெருமக்கள், மாணவ, மாணவிகளும் பங்கேற்று, கவுதமை பாராட்டி வாழ்த்தினர்.
வேலூர் வி.ஜ.டி. பல்கலை கழகத்தில், நவம்பர் 22- ஆம் தேதி நடைபெறவுள்ள, மாநில அளவிலான, சதுரங்கம் { செஸ்} விளையாட்டு போட்டியில், திருநெல்வேலி மாவட்ட சிறந்த சதுரங்க (செஸ்) விளையாட்டு வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ள கவுதம், பங்கேற்கிறார்.
அதனை முன்னிட்டு முதன்மை கல்வி அலுவலர் மு. சிவக்குமார், மாவட்ட, உடற்கல்வி ஆய்வாளர் ஜெயராஜ் ஆகியோரும், வெகுவாக பாராட்டினர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர்: “மேலப்பாளையம்” ஹஸன்.
