Headlines

திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்ற, வாராந்திர, மக்கள் குறை தீர்க்கும் மனுநாள் முகாம்! மேயர் ராம கிருஷ்ணன் பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து, கோரிக்கை மனுக்களை, நேரடியாக பெற்றார்!

திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்ற, வாராந்திர, மக்கள் குறை தீர்க்கும் மனுநாள் முகாம்! மேயர் ராம கிருஷ்ணன் பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து, கோரிக்கை மனுக்களை, நேரடியாக பெற்றார்!

திருநெல்வேலி,நவ.4:-
திருநெல்வேலி மாநகராட்சி, மைய அலுவலக கூட்ட அரங்கில், இன்று (நவம்பர்.4) வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் மனுநாள் முகாம் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன் பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து, கோரிக்கை மனுக்களை நேரடியாக பெற்றுக் கொண்டார்.

“பெறப்பட்ட மனுக்கள், முறையாக பரிசீலிக்கப்பட்டு, அவற்றின் மீது உரிய நடடிவக்கைகள் எடுக்கப்படும்!”- என, மனுதாரர்களிடம் மேயர் “உறுதி” அளித்தார். அதனை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம், மனுக்களை பரிசீலிக்குமாறு, அறிவுறுத்தினார்.

துணை மேயர் கே.ஆர்.ராஜூ, பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையாளர் எம்.புரந்திரதாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

55-வது வார்டு கவுனசிலர் முத்துசுப்பிரமணியன் அளித்த மனுவில், சென்ற மாதம் (அகடோபர) 28-ஆம் தேதி நடைபெற்ற,”பகுதி சபா” கூட்டத்தில் அனைத்து குடியிருப்போர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு, எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, அடிப்படை வசதிகள் குறித்த தீர்மானத்தை, உடனடியாக நிறைவேற்றி தருமாறு, கேட்டுக்கொண்டு உள்ளார்.18-வது வார்டு பேட்டை மேலத்தெரு மக்கள் அளித்த மனுவில், தங்கள் பகுதியில் பல மாதங்களாக பழுதடைந்து இருக்கும், கழிவுநீர் ஓடையினை சீரமைக்க கேட்டுள்ளனர்.

“தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் உறவின்முறை” சங்க மாநில தலைவர் வே.ச.முத்துக்குமார் அளித்த மனுவில், வி.எம்.சத்திரம் ராமர்கோவில் தெருவில், மாநகராட்சிக்கு சொந்தமான பொது பாதையில், எழுப்பப்ட்டுள்ள இரும்பு கேட், சுவற்றினை அகற்றிட வலியுறுத்தி உள்ளார்.

பெண்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் அமைப்பை சார்ந்த ஜெயஸ்ரீ என்பவர் அளித்த மனுவில், புதிய பேருந்து நிலையம் அருகில், தங்களுக்கென ஆட்டோ நிறுத்தம் ஒன்றை அமைத்துத்தர, கோரிக்கை விடுத்துள்ளார்.

பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை ஆஸ்பத்திரி தெரு இஸ்மாயில் மைதீன் அளித்த மனுவில், குடியிருப்பு பகுதியில் உள்ள, பழைய அனைத்து விதமான கழிவுபொருட்கள் மற்றும் இரும்பு பொருட்கள் கடையினை, உடனடியாக அப்புறப்படுத்திட கேட்டுள்ளார்.

நெல்லை சநதிப்பு கைலாசபுரம் மூக்கையா அளித்த மனுவில், அங்குள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளிக்கும், அருகில் உள்ள அம்மா உணவகத்திற்கும், போர்வெல் மின் மோட்டர் மூலம் தண்ணீர் எடுக்கப்படுகிறது.

இந்த போர்வெல் மின் இணைப்பு, அம்மா உணவகத்தில் இருப்பதால், பள்ளி வேலை நேரம் முடியும் போது, பள்ளியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

எனவே, அம்மா உணவகத்திற்கும், பள்ளிக்கும் தனித்தனியாக, மின் இணைப்பு ஏற்படுத்தி, சின்டெக்ஸ் டேங்க் அமைத்து, தண்ணீர் தர வலியுறுத்தி உள்ளார்.

“அப்துல் ரகுமான் முதலாளி நகர்” பொது நலச்சங்கத்தினர் அளித்த மனுவில், தங்கள் பகுதியில் அதிகரித்து வரும், குடியிருப்புகளை கருத்தில் கொண்டு, மாநகராட்சி சார்பாக தங்கு தடையின்றி குடிநீர் கிடைத்திட, நடவடிக்கை மேற்கொள்ள, கேட்டுள்ளனர்.

மேலப்பாளையம் வீரமாணிக்கபுரம் சற்குணம் அளித்த மனுவில், “வேய்ந்தான்குளம்” உபரி நீர் ஓடையினை சீரமைக்க கேட்டுள்ளார்.

மேலப்பாளையம் ஜாபர் அளித்த மனுவில், மேலப்பாளையம் முதல் முன்னீர்பள்ளம் வரையிலான, அம்பாசமுத்திரம் சாலையில், ஆங்காங்கே “வேகத்தடைகள்” அமைத்திட கோரிக்கை வைத்துள்ளார்.

“தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி” நெல்லை மாவட்ட குழுவினர் அளித்த மனுவில், சந்திப்பு அம்பேத்கர் திருவுருவச் சிலையை சுற்றியுள்ள இரும்பு வேலியை அப்புறப்படுத்திடவும், அதன் அருகில் பூங்கா மற்றும் பொது நூலகம் அமைத்து, சிலையை சீரமைக்க கேட்டுள்ளனர்.

வீரமாணிக்கபுரம் ஊர் மக்கள் அளித்த மனுவில், தங்கள் பகுதியில் பாதாளச்சாக்கடை, சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர கேட்டுள்ளனர்.

தச்சநல்லூர் “ஆனந்த புரம்” முருகன் அளித்த மனுவில், எக்காளியம்மன் கோவிலுக்கு கீழ் புறம், ஸ்ரீபுரம் செல்லும் வழியில், பாதாளச்சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடுவதை, உடனடியாக சரி செய்ய கேட்டுக் கொண்டுள்ளார்.

நெல்லை டவுண் லாலுகாபுரம் கீழத்தெரு கஸ்பார் அளித்த மனுவில், தங்கள் பகுதியில் பாதாளச்சாக்கடையில் ஏற்பட்டிருக்கும் அடைப்பினை நீக்கிதரக் கேட்டுள்ளார்.

பாளையங்கோட்டை “வடக்குப்படை முப்பிடாதி அம்மன் கோவில் கமிட்டி” சார்பில் அளித்த மனுவில், கோட்டுர் ரோடு மற்றும் சொக்கலிங்கசாமி கோவில் தெருக்களில் சப்பரம் சென்று வர, மின் வசதி அமைத்து தர கேட்டுக் கொண்டுள்ளனர்.

நெல்லை டவுண் ஜாமியா பள்ளிவாசல் தெரு “அரபி மதரஸா” கமிட்டியினர் அளித்த மனுவில், தங்கள் பகுதியில் சாலை பணி தொடங்கப்படவுள்ளது.

இருசக்கர வாகனங்கள் மற்றும் பொது மக்களும் சென்று வருவதால் சாலையை பொது மக்களுக்கு ஏற்றவாறு அமைத்து தர கேட்டுக்கொண்டு உள்ளனர்.

முகாமில், உதவி செயற்பொறியாளர்கள் அலெக்ஸாண்டர், தங்கப்பாண்டியன், நிர்வாக அலுவலர் காசி விசுவ நாதன், சுகாதார அலுவலர் சாகுல் அமீது, சுகாதார ஆய்வாளர் முருகன், உதவி பொறியாளர் (திட்டம்) மவுனிஷா மற்றும் துறை சார்நத அலுவலர்கள், கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர்: “மேலப்பாளையம்” ஹஸன்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *