திருவிதாங்கோடு, 03
மனிதநேய மக்கள் கட்சியின் தொழில் பிரிவு அமைப்பான மனிதநேய தொழிலாளர் சங்கம் (MTS), திருவிதாங்கோடு பேரூர் சார்பாக முதலாவது ஆண்டு துவக்க விழா மற்றும் நேம் பேட்ஜ் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி மாவட்ட மனிதநேய தொழிற்சங்க செயலாளர் சபா அலி தலைமையில் திருவிதாங்கோடு துரப்பு ஜங்ஷனில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் அன்புச் சகோதரர் பி. எஸ். ஹமீது அவர்கள் மனிதநேய மக்கள் கட்சி கொடியை ஏற்றி, பின்னர் சிறப்புரையாற்றினார்.

மேலும், மாநில மனித உரிமை பொருளாளர் திருவை செய்யது அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
தக்கலை போக்குவரத்து உதவி ஆய்வாளர் டேவிட் ராஜ் அவர்கள் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு குறித்து சிறப்பு உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட தமுமுக–மமக தலைவர் மகபூப் ஜெய்லானி, மாவட்ட மமக செயலாளர் அபூபக்கர் சித்தீக், மாவட்ட பொருளாளர் அக்பர், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் நைனா முகம்மது,
துரப்பு எம்டிஎஸ் பொருளாளர் சேக் முகம்மது, திருவிதாங்கோடு பேரூர் தமுமுக–மமக தலைவர் எஸ். எம். சையது அலி, அத்துடன் எம்டிஎஸ் மற்றும் தமுமுக–மமக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
தக்கலை சிறப்பு நிருபர் அன்ஷாத் மாலிக்.
