Headlines

உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயுதபூஜை முன்னிட்டு தேங்காய் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி.

உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயுதபூஜை முன்னிட்டு தேங்காய் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி.

செப் 30 : உடுமலை

உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் ஆயுத பூஜையை முன்னிட்டு தேங்காய் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம், பகுதிகளில் பிஏபி பாசன பகுதி மற்றும் அமராவதி பாசன பகுதிகளில் ஒரு லட்சம் ஏக்கரில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இதுதவிர கிணற்றுப் பாசனம் ஆழ் குழாய் , சொட்டு நீர்ப்பாசனம் மூலமும் தென்னை சாகுபடி பரப்பு விரிவடைந்துள்ளது .25 ஆண்டுகளுக்கு முன்பு வரை 2000 ஆண்டில் உடுமலை மடத்துக்குளம் கொழுமம் ,வாழவாடி, பெதப்பம் பட்டி, சாமராய பட்டி. ஜல்லிபட்டி ,உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களில் .கத்தரி, தக்காளி ,வெண்டை, வெங்காயம் ,உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வந்தது, கூலி ஆட்கள் கிடைக்காது விவசாயக் கூலி உயர்வு உரம் தட்டுப்பாடு பருவநிலை மாற்றம் விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்காது உள்ளிட்ட காரணங்களினால் காய்கறி சாகுபடி செய்து வந்த விவசாயிகள் பணப்பயிரான தென்னை தேர்ந்தெடுத்தனர்.

ஐந்து ஆண்டுகளானாலும் நிலையான வருவாய் கிடைக்கும் என நம்பி விவசாயிகள் பல தங்களை விளை நிலங்களில் தென்னை சாகுபடி யை துவக்கினர்?நெட்டை ரகம், குட்டை ரகம், கலப்பின ரகம் என மூன்று ரகங்களை தேர்ந்தெடுத்து இளநீர், தேங்காய், கொப்பரை, போன்றவற்றின் மூலம் தங்களது பொருளாதார தேவை பூர்த்தி செய்யலாம் என நினைத்தனர் .இதனால் உடுமலை மடத்துக்குளம் குடிமங்கலம் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 80 ஆயிரம் ஹேக்டேர் விளை நிலங்களில் தென்னை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் மழை அணைக்கட்டுகள் அருகே இருப்பது போன்ற காரணம் தென்னைக்கு தேவையான நல்ல மழை மிதமான வெப்பநிலை கிடைக்கும் என்பதால் ஏராளமான விவசாயிகள் நெட்டை குட்டை வீரிய ரக ஒட்டு கலப்பினம் என கிடைத்த ரகங்களை நட்டு பராமரித்தனர்.

இந்நிலையில் தேங்காய் விலை தற்சமயம் தங்கம் போல டன் ஒன்று இருக்கு ரூ 70 ஆயிரத்தை தாண்டி விற்பனை ஆகிறது விலை உயர்ந்த போதும் மகசூல் இல்லாத காரணத்தால் வட மாநிலங்களுக்கான மத்திய பிரதேசம் உத்தர பிரதேசம் ஒரிசா பீகார் ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு உடுமலை மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏற்றுமதி செய்யும் அளவானது பெருமளவு சரிவடைந்துள்ளது.

வாரந்தோறும் வடமாநிலங்களுக்கு சமையல் மற்றும் எண்ணெய் உற்பத்திக்காக சுமார் 300 டன் வரை ஏற்றுமதியாகி வந்த நிலையில் தற்போது இதில் 50 சதவீதம் அளவிற்கு ஏற்றுமதி செய்ய முடிகிறது.
தேங்காய் பச்சை ஒரு டன் ரூ.65,500 க்கும் தேங்காய் கருப்பு ஒரு டன் ரூ 69,500 க்கும் தேங்காய் கசங்கள் ஒரு டன் ரூ 62.500 க்கும் விற்பனை ஆகிறது அதிகபட்சமாக பொள்ளாச்சி சந்தையில் பச்சைக் காய் ஒரு டன் ரூபாய் 67.500 க்கும் கருப்பு காய் 1 டன் ரூ.70 ஆயிரத்து 500க்கும் விற்பனை ஆகிறது இதேபோல ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ 210க்கும் குறைந்தபட்சமாக ரூ 95 சராசரியாக ரூ 62க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டர் ரூ 450 வரை விற்பனை ஆகிறது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *