நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து ஜயப்பன் கோவில் , உழவர் சந்தை செல்லும் சாலை நீண்டகாலமாக குண்டும் குழியுமாக காணப்பட்டதால் குன்னூர் நகரமன்ற கூட்டத்தில் பல முறை கவுன்சிலர் ஜாகீர் உசேன் குன்னூர் நகராட்சி ஆனையாளரிடம் தொடர்ந்து சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என முறையிட்டதால் பொதுமக்கள் நலன் கருதி நகராட்சி ஆனையாளர் ஜாகீர்உசேன் கோரிக்கையை ஏற்று தரமான காங்ரீட் சாலை அமைக்க அனுமதி வழங்கினார்.
தற்போது காங்ரீட் சாலை பணி துவங்கி உள்ளதால் உழவர் சந்தை செல்லும் மக்கள் ஒரு வாரத்திற்கு புளூ ஹில்ஸ் வழியாக. செல்ல வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் உள்ளூர் வாசிகள் ஒத்துலைப்பு தர வேண்டும் என குன்னூர் நகரமன்ற. உறுப்பினர் ஜாகீர் உசேன் கேட்டுக்கொண்டுள்ளார்
