செப் 5 கன்னியாகுமரி
கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலை, இராமன்பறம்பு பகுதியில் மின்மினி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 24-வது ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
இவ்விழாவின் ஒரு பகுதியாக, கேரளா பாரம்பரியத்தை நினைவு கூரும் வகையிலும், இருசக்கர வாகன விபத்தில் உயிரிழப்புகளை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மாவேலி வேஷமிட்டு தலையில் ஹெல்மெட் அணிந்து ஜெண்டை மேளத்துடன் ஊர்வலம் நடத்தப்பட்டது.
இந்த ஊர்வலத்தை பொதுமக்கள் ஆர்வமுடன் வரவேற்று பாராட்டினர்.
கேமராமேன் ஜெனீருடன் குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
