செப் 5 கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் காவல் நிலைய வளாகத்தில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. காவல் நிலைய வளாகத்தில் பாரம்பரிய முறையில் அழகிய அத்தப் பூ கோலம் இடப்பட்டு விழா அலங்கரிக்கப்பட்டது.
காவல் அதிகாரிகள் மற்றும் போலீசார் அனைவரும் இணைந்து கொண்டாடிய இந்நிகழ்வில், ஒற்றுமை, சகோதரத்துவம், மதச்சார்பற்ற தன்மை ஆகியவற்றை வலியுறுத்தி அனைவருக்கும் இனிய ஓணம் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
