செப் 2, கன்னியாகுமரி :
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று இரவு 10 மணிக்கு மதுரை நோக்கி புறப்பட்ட தமிழகப் போக்குவரத்து துறையின் குளிர்சாதனப் பேருந்தில், அஜாக்கிரதையான செயல் பரபரப்பை ஏற்படுத்தியது.
பேருந்தை ஓட்டிய ஓட்டுநர், பொதுமக்களின் உயிரைப் பொருட்படுத்தாமல் ரீல்ஸ் பார்த்துக்கொண்டே வாகனம் ஓட்டியதுடன், பான் பராக் போட்டு துாங்கியவாறும் இருந்ததாக பயணிகள் கூறினர். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்து, அச்சத்திலும் கவலையிலும் ஆழ்ந்தனர்.

“பொதுமக்களின் உயிரை பணயம் வைத்த ஓட்டுநரை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும்” என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதே நேரத்தில், சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர் ரியாஸ்.
