ஆக் 29, கன்னியாகுமரி :
கன்னியாகுமரி மாவட்டம் ஈசாந்தி மங்கலம் பகுதியில் ஆற்றில் பாய்ந்த மினி டெம்போ, நீரில் மிதந்து கொண்டிருக்கும் காட்சியை பார்த்த பொதுமக்கள் பெரும் ஆச்சரியத்தில் திரண்டனர்.
திடீரென ஆற்றுக்குள் சென்ற மினி டெம்போ, நீரில் நீச்சல் அடிப்பது போல் மிதந்து செல்ல, அப்பகுதியை கடந்து சென்ற மக்கள் ஆர்ப்பரித்து பார்த்தனர்.
இதனால் அந்த பகுதி சிறிய பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்
