மதுரையில் டவுண் ஹால் ரோடு பகுதியில் உள்ள கூடல் அழகர் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் உள்ள கடைகளை அகற்ற கோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து 6 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

கூடல் அழகர் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் இடத்தில் கடைகள் உள்ளது.டவுண்ஹால் ரோடு பகுதியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட கடைகள் இயக்கி வருகிறது. இந்த கடைகளை அகற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து இந்து அறநிலையத்துறை ஊழியர்கள் காவல் துறையினரின் உதவியுடன் 6 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
