தென்காசி
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் தமிழக அரசின் மருத்துவ உள்கட்டமைப்பு விரிவாக்க திட்டம் இன்று தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் அடிக்கல் நாட்டில் துவக்கி வைத்தார்.
தமிழக முதலமைச்சரின் ஆணையின்படி செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சுமார் 20 கோடி மதிப்பீட்டில் மூன்று அடுக்கு மருத்துவமனை கட்டிடம் க்ரிட்டிக்கல் கேர் யூனிட் செயல்படுவதற்காக இன்று பூமி பூஜை தொடங்கப்பட்டது இந்த கட்டிடத்தில் சுமார் 3. கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் உயிர்காக்கும் நவீன ரக மருத்துவ உபகரணங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் இது இப்பகுதி சுற்றுவட்டார மக்களின் அவசரகால உயிர் காக்கும் செயல்பாடுகளுக்கு வழிவகுக்கும் என்றும் அதிநவீன மருத்துவ வசதிகள் கொண்ட மருத்துவமனையாக செங்கோட்டை மருத்துவமனை மேம்படுத்தப்படும் என்று இந்த மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ் கண்ணன் கூறினார்.
இந்த மருத்துவமனையானது இரண்டு முறை தேசிய விருதுகளையும் மாநில சிறந்த மருத்துவமனைக்கான விருதுகளையும் இந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் சிறந்த மருத்துவதற்கான பல விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது இந்த புதிய கட்டிட துவக்க விழா நிகழ்ச்சியில் தென்காசி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மருத்துவர் ராணிஸ்ரீ குமார்
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ கே கமல் கிஷோர் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜா தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் வல்லம் திவான் ஒலி தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம் செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ரவிசங்கர் மாவட்ட பொருளாளர் ஷெரீப் மாவட்டத் துணைச் செயலாளர் கென்னடி வடகரை இஸ்மாயில் மருந்தாளுனர் அப்பாஸ் உட்பட ஏராளமான அரசு அலுவலர்கள் மருத்துவ ஊழியர்கள் கலந்து கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம்
