தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் B. தர்மத்துபட்டியில் அருள் மிகு ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. மதுரை தெம்மாங்கு பாடகி திருமதி இராஜராஜேஸ்வரி யின் பாடல் கச்சேரியுடன் இவ்விழா வின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் சிறப்பிக்கப்பட்டது.
குடங்களில் மாவிளக்கு அலங்காரம் செய்து அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து ஊர்வலம் நடைபெற்றது. மற்றும் தெம்மாங்கு பாடகி திருமதி இராஜராஜேஸ்வரி யின் பாடலுடன் குத்துவிளக்கு பூஜை சிறப்பான முறையில் நடைபெற்றது.
பக்த பெருமக்கள் பொங்கல் வைத்தல் மற்றும் தீச்சட்டி ஏந்துதல் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு அம்மனின் அருள் பெற்றனர். மேலும் இவ்விழாவினை சிறப்பிக்கும் வகையில் மஞ்சள் நீராடலுடன் நிறைவு பெற்றது.
