மார்ச்.26-
செங்கோட்டை கே.சி. ரோட்டில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.76 கோடி மதிப்பீட்டில் வாரச்சந்தை கட்டிடம் கட்டப்பட்டு அதில் நகராட்சி சார்பில் ஆட்டு இறைச்சி மற்றும் மீன், கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடை உள்ளிட்ட 21 கடைகள் கட்டப்பட்டது.
அதனை முதல்-அமைச்சர்.மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி முலம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திறந்து வைத்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த கடைகளுக்கு டெண்டர் விடுக்கப்பட்ட நிலையில் கட்டி முடிக்கப்பட்ட கடைகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் இருந்தது.
பின்னர் பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு கடந்த மாதம் 15-ந் தேதி இரண்டாம் கட்டமாக கட்டப்பட்ட வாரச்சந்தை கட்டித்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு காணொலி மூலம் திறந்து வைத்தார். இதனால் வரும் வாரம் முதல் சந்தை கடைகள் திறக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் அவை இன்னும் திறக்கப் படாமல் இருப்பது மிகவும் வேதனையளிப்பதாக பொதுமக்கள் வியாபாரிகள் கூறினர்.
இந்நிலையில் கடந்த வாரம் செங்கோட்டை கண்ணுபுளி மெட்டு சாலை யில் வழக்கம்போல செவ்வாய்க்கிழமை சந்தை கூடியது. சந்தைக்கு வெளியே சாலையிலேயே வியாபாரிகள் கடைகளை வைத்திருந்தனர்.இதனால் போல போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அரசு மமத்துக்கு கள்,அவசரகால ஊர்திகள் கூடும் சிரமத்திற்கு உள்ளது குறித்து சாலையோர வியாபாரிகள் கூறுகை யில், புதிய கட்டிடங்கள் திறக்கப் படாதது மிகுந்த வேதனை அளிக்கிறது. திறந்த வெளியில் கடை வைத்தி ருப்பதால் மழைகாலங்களில் கடும் சிரமம் அடைகிறோம். மேலும் காய்கறிகளும் அதிகம் வீணாகிறது. அழு கும் காய்கறிகள் என்பதால் அவற்றை நஷ்டத்திற்கு விற்கும் நிலைக்கு உள்ளாகி றோம். எனவே வியாபாரி கள் நிலையையும், போக்கு வரத்து பிரச்சினையும் தீர்க்கும் வகையில் சந்தை கடைகளை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
