திண்டுக்கல் முன்னாள் நகர்மன்ற தலைவரும் திமுக நகரச் செயலாளரும், தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவருமான ம. பஷீர் அகமது அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி ஆனது திண்டுக்கல் மாவட்ட பஞ்சாலை தொ. மு. ச அலுவலகத்தில் அவர்களின் மகனும் மேற்குப் பகுதி திமுக செயலாளர் ப.பஜுலுல் ஹக் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர், ,பழனி சட்டமன்ற உறுப்பினரும் ஐ.பி. செந்தில்குமார் M.L.A மற்றும் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், மேயர் ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா மற்றும் பகுதி செயலாளர்களும் கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டு நினைவு அஞ்சலி செலுத்தினர்.
இவர் நகர் மன்றத் தலைவராக 1996 மற்றும் 2001 இரு முறை பொறுப்பு வகித்தார் திமுகவில் திண்டுக்கல் நகர திமுக செயலாளர் மற்றும் மாவட்ட அவைத்தலைவர், தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்து உள்ளார் மாநில செயற்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார் . இவர் நகர் மன்ற தலைவர் ஆக பொறுப்பு வகித்த காலத்தில் திண்டுக்கல் மாவட்டம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது அப்போது சிறப்பாக செயல்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் தடையின்றி வழங்கியதும் பல சிறப்பான செயல் திட்டங்களை கொண்டு வந்துள்ளார்