திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி நந்தவனம் அருகே சுரேஷ் என்பவர் நெல் நாற்று நடவு செய்து அறுவடை செய்யும் நிலையில் உள்ளன. மேலும் அருகில் சுப்புராஜ் என்பவருக்கு சொந்தமான 17 தென்னங்கன்றுகள் மற்றும் சடையப்பன் என்பவருக்கு சொந்தமான 29 தென்னங்கன்றுகளை ஏழு காட்டு யானைகள் புகுந்து நாசம் செய்துள்ளனர். தொடர்ந்து வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையிலும் கூட விவசாய பயிர்களை காட்டு யானைகள் கடும் சேதம் செய்துள்ளனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வனத்துறையின் மூலம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் ஊரின் அருகிலே உள்ள தோட்டங்களில் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். வனக்காவலர்களின் பற்றாக்குறையினால் யானைகளை விரட்டும் பணி தொய்வடைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உடனடியாக அதிகப்படியான வனக்காப்பாளர்களை நியமித்து காட்டு யானைகளை மலை பகுதிக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்…